76-வது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (26.01.2025) நடைபெற்ற இந்திய திருநாட்டின் 76-வது குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வருகை தந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் வரவேற்றார்.பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காலை 8.05 மணியளவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்.பின்னர், சிறப்பாக பணியாற்றிய 133 தலைமைக் காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பாக 2 நபர்களுக்கு தலா ரூ.25,000ஃ- மதிப்பில் வருடாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.50,000ஃ-த்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தொடர்ந்து, அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு நல்கி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக திகழ தொடர்ந்து தங்களது பங்களிப்பை வழங்கி வரும் 12 மாவட்ட நிலை அலுவலர்களுக்கும், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சிறப்பு இனங்களில் சிறந்த ஆலை பராமரிப்பு மற்றும் தொழிலாளர் நலன் காக்கும் 4 நிறுவனங்களுக்கும், அதிகமாக பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதியினை வழங்கிய 4 நிறுவனங்களுக்கும், சிறந்த உழவர் உற்பத்தியாளர் 5 நிறுவனங்களுக்கும், பொதுநலன் சார்ந்த செயல்பாடு மற்றும் சமூக மேம்பாட்டுக்கான பங்களிப்பு ஆற்றிய 55 நபர்களுக்கும்,
3 சிறந்த தன்னார்வ நிறுவனங்களுக்கும், 2 சிறந்த குருதிக் கொடையாளர்களுக்கும், 1 சிறந்த தொண்டு நிறுவனத்திற்கும், திருநங்கைகளின் சுகாதார நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த 3 நபர்களுக்கும், சிறந்த சமூக ஆர்வலர்கள் 2 நபர்களுக்கும், 2 சிறந்த குழந்தைகள் நல காப்பகத்திற்கும், கரிசல் இலக்கிய எழுத்தாளர்கள் 2 நபர்களுக்கும், கரிசல் இலக்கிய படைப்புகளுக்கு உதவிய எழுத்தாளர்கள் 2 நபர்களுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மானிய கடனுதவி பெற்று சுய தொழில்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மானிய கடனுதவி பெற்று சுய தொழில்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் 3 பெண் தொழில் முனைவோர்களுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மானிய கடனுதவி பெற்று சுய தொழில்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் 3 சிறந்த இளம் தொழில் முனைவோர்களுக்கும், சிறுதானிய உற்பத்தியில் சிறப்பாக செயலாற்றும் 6 விவசாயிகளுக்கும், 2 சிறந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கும், 1 சிறந்த அங்கன் வாடி மையத்திற்கும், அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருதல், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் நீர்நிலைகளை பாதுகாத்தல் ஆகிய இனங்களுக்கு பாராட்டி சிறந்த பள்ளி, சிறந்த ஆசிரியர், சிறந்த மாணவர், சிறந்த சுற்றுச்சூழல் ஊக்கி, சிறந்த நீர் பாதுகாவலர் என 5 நபர்களுக்கும்,
சிறார் குற்றவாளிகளுக்கான மறுவாழ்வு பணிகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக 1 நபருக்கும், 5 சிறந்த மருத்துவர்களுக்கும், 11 சிறந்த ஊராட்சி செயலர்களுக்கும், சிறப்பாக செயல்படும் 4 பள்ளிகளுக்கும், 2 சிறந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 2 கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கும், 11 சிறந்த சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர்களுக்கும், சாலை பாதுகாப்பு உறுப்பினர் 1 நபருக்கும், சிறந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்) 2 நபர்களுக்கும், சிறந்த மருத்துவ ஊர்தி பணியாளர்கள் 2 நபர்களுக்கும், விருதுநகர் மாவட்ட தேசிய தகவல் மைய பணியாளர்கள் 4 நபர்களுக்கும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்திய 2 பணியாளர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைச் சார்ந்த 158 அரசு பணியாளர்களுக்கும், குடியரசு தின விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த 5 நபர்களுக்கும் என மொத்தம் 463 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ப்ரியா ரவிச்சந்திரன்,I A S., திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) மரு.தண்டபாணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S., மாவட்ட அளவிலான அலுவலர்கள், கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply