கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய மாவட்ட அளவிலான எச்.ஐ.வி./ எய்ட்ஸ் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மூலம் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய மாவட்ட அளவிலான எச்.ஐ.வி. / எய்ட்ஸ் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (29.09.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மூலம், மாவட்டத்தில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், சமூகத்தில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்காமலும், ஒதுக்காமலும், சக மனிதர்களை போன்று அன்பு செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு வாகனம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று கரகாட்டம், பறை இசை, ஒயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் மூலம் எச்.ஐ.வி. / எய்ட்ஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட மேலாளர்(எய்ட்ஸ் கட்டுப்பாடு), மேற்பார்வையாளர்கள், கோடாங்கி கலைக்குழு மற்றும் வெண்மணி கிராமிய கலைக்குழுவினர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply