தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் வே.வெ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் (25.09.2025) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்திய தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.பின்னர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டுதல் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்து, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கையேடுகள், புத்தகங்களை பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக, இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கான முக்கிய நோக்கம் “What we see and what we think, that we become” நாம் எதை காண்கிறமோ, எதை நினைக்கிறமோ அதுவாக மாறுகிறோம் என்ற தாரக மந்திரம் உள்ளது. அதைப்போல, போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களில் பலர் கிராமப் பகுதியைச் சேர்ந்த போட்டியாளர்களே. இவர்களில் பலருக்கு நம்மால் முடியுமா என்ற உள்ளுணர்வால் பின்னடைவு ஏற்படுகிறது.
மாணவர்கள் தங்கள் கல்லூரி காலங்களிலேயே கிடைக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்தி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகலாம். என்ன படிக்கலாம், தங்களின் ஆர்வத்திற்கேற்றவாறு எதிர்காலத்தில் தங்களது கல்வியினை எவ்வாறு மேம்படுத்தி கொள்ளலாம் என்று சிந்தித்து செயல்பட வேண்டும். போட்டித் தேர்வுகள் என்பது தனி உலகம் அல்ல. அன்றாடம் தங்கள் பாடத்திட்டத்தினை எவ்வாறு படிக்கலாம் என்றும், மாணவர்கள் தங்களின் பாடத்திட்டத்தை கூர்ந்தாய்வு செய்து, நடைமுறைக்கேற்றவாறு சிந்தித்து செயல்பட்டாலும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம்.எதிர்காலத்தில் நினைத்ததை அடைவதற்கு மாணவர்கள் தங்களின் கல்லூரி காலங்களிலேயே போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பட்சத்தில், நேரத்தை வீணடிக்காமல் சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். வெற்றிக்கதைகள் கேட்பது, செய்தித்தாள்களில் குறிப்புகளை எவ்வாறு தயார் செய்வது என்பதை பற்றி சிந்தித்து செயலாற்றும் பட்சத்தில் வெற்றி பெறலாம்.
இவையனத்தும், மாணவர்களின் இடைவிடாத முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் மட்டுமே சாத்தியம். இவற்றையெல்லாம் நிறைவு செய்வதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், வெற்றி நிச்சயம் திட்டம், திறன் மேம்பாட்டுத் திட்டம் என பல்வேறு திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்தி தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தற்பொழுதிலிருந்தே தயாராகி போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர்(ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், திருநெல்வேலி) திரு.கா.ஹரிபாஸ்கர் அவர்கள் வேலை வாய்ப்பிற்கு வளர்த்துக் கொள்ள கூடிய திறன்கள் குறித்தும், உதவி இயக்குநர்(தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், மதுரை) திரு.அ.கலைச்செல்வம் அவர்கள் போட்டித் தேர்வுகள் குறித்தும், பொது மேலாளர்(மாவட்ட தொழில் மையம், விருதுநகர்) திரு.தி.கண்ணன் அவர்கள் சுய வேலைவாய்ப்பு குறித்தும் சிறப்புரையாற்றினார்.
0
Leave a Reply