காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (16.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், முடுக்கன் குளம் கிராமத்தில் ரூ.32 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் உபமின் நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுத்தினார்.
அதனை தொடர்ந்து, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், ஆவியூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் மின் நிலையத்தினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மின் உபகரணங்களை முறையாக பராமரிப்பு செய்து, தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய அலுவலர்களை அறிவுறுத்தினார்.பின்னர், கடம்பங்குளம் கிராமத்தில் சூரிய ஒளி தகடுகள் அமைக்கப்பட்டுள்ளதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மின்சார உற்பத்தி பயன்பாடு குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், காரியாபட்டி வட்டத்தில் வசிக்கும் பயனாளி ஒருவரின் இல்லத்தில் அரசின் மானியத்தின் மேற்கூரையில் சூரிய ஒளி தகடுகள் அமைக்கப்பட்டு, மின்சார உற்பத்தி செய்து பயன்படுத்தப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளியிடம் அதன் பயன்கள் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.இந்த ஆய்வின் போது, ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் என அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் சென்றடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply