விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (25.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை சுற்றியுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, நடைபெற்றுவரும் திடக்கழிவு மேலாண்மையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.மேலும், அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் அருகில் சிப்காட் அமையவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, சிப்காட் அமைப்பதற்கான முன்னேற்றப்பணிகள், திட்ட செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களிடம் கேட்றிந்தார்.பின்னர், அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், விதை உற்பத்தி மையம், விதை சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு கிடங்கினை நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு கால்நடைகள் வளர்த்தல் விதம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து, காரியாபட்டி வட்டம் தோணுகால் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு மின்சாரத் துறையில் பெயர் மாற்றம் செய்வதற்கு மனு அளித்த விண்ணப்பதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து, மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்த ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்பு, பழக்கன்றுகள் தொகுப்பு மானியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கினார்.
இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
0
Leave a Reply