25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று(12.08.2025) இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், ரூ.2.92 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட 8 வகையான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (12.08.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

முன்னேற விளையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 52 அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் கிராமப்புற மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகளை வழங்கும் வகையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், குருதி பகுப்பாய்வு, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் புரோப், இ.சி.ஜி, Crash cart, Radiant Warmar, Biochemistry analyser    உள்ளிட்ட 8 வகையான மருத்துவ உபகரணங்கள் ரூ.2.92 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன.இந்த மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  (12.08.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் பொது மேலாளர்கள் திரு.ராமசுவாமி(புவி அறிவியல் ஆய்வகம், சென்னை), திருமதி மீடா பிரசாத்(மனிதவளம்), மரு.ஹிமான்சு குக்ரீதி உட்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News