விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (02.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஓ.கோவில்பட்டி ஊராட்சியில், புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள சமுதாயக் கூட்டத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், ஓ.கோவில்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் குளம் அமைக்கப்பட்டு, தூர்வாரப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் சிட்கோ வளாகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ், தமிழ்நாடு சிறுதானிய இயக்க திட்டத்தில், ஒருங்கிணைந்த சிறுதானிய முதல் நிலை சுத்திகரிப்பு மற்றும் மதிப்புக்கூட்டுதல் நிலையமானது ரூ.16.54 இலட்சம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் வேளாண் பட்டதாரி இளைஞர்களை தொழில்முனைவோராக்குதல் திட்டத்தில் மானியம் வழங்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது , வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்) திருமதி செல்வி, விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் திரு.வேலுச்சாமி, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
0
Leave a Reply