கணினி மூலம் சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள (Randomization) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் , மாவட்ட ஆட்சியர் , அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில் (25.03.2026), மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கணினி மூலம் சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள (Randomization) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அந்தந்தத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் சீரற்ற (Randomization) முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள:
* 202-இராஜபாளையம்: 269 வாக்குச்சாவடி மையங்களுக்கு 322 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 322 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 349 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள்.
*203-திருவில்லிபுத்தூர்: 308 வாக்குச்சாவடி மையங்களுக்கு 369 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 369 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 400 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள்.
* 204-சாத்தூர்: 291 வாக்குச்சாவடி மையங்களுக்கு 349 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 349 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 378 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள்.
* 205-சிவகாசி: 288 வாக்குச்சாவடி மையங்களுக்கு 345 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 345 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 374 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள்.
*206-விருதுநகர்: 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு 337 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 337 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 365 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள்.
*207-அருப்புக்கோட்டை: 270 வாக்குச்சாவடி மையங்களுக்கு 324 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 324 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 351 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள்.
*208-திருச்சுழி: 292 வாக்குச்சாவடி மையங்களுக்கு 350 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 350 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 379 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள்.
மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2,396 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 2,396 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 2,596 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பாதுகாப்பறையில் இருந்து இன்று (25.03.2026) அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டு, தகுந்த காவல்துறை பாதுகாப்புடன் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன.
அதனடிப்படையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பின்வரும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பறைகளில் வைக்கப்படவுள்ளன:
*இராஜபாளையம்: இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.
* திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம்.
* சாத்தூர்: சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம்.
* சிவகாசி: சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
* விருதுநகர்: விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி.
* அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம்.
* திருச்சுழி: காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.
இந்த இயந்திரங்கள் அனைத்தும் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு மற்றும் 24 மணி நேர சிசிடிவி (CCTV) கண்காணிப்பில் வைக்கப்படும்.
பின்னர், தேர்தல் பொதுப் பார்வையாளர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் இந்த இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு, வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா. ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு. சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு. சீனிவாசன், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply