குடும்பம் ஒரு கோவில் .
ஒரு குடும்பம் சந்தோஷமாக இருப்பதற்கு வீட்டில் உள்ள ஒவ்வொருவருடைய நடவடிக்கையும், சரியான அளவில் இருக்க வேண்டும். முக்கியமாகவிட்டுக்கொடுத்துச்செல்லவேண்டும்.குடும்பத்தில்உள்ளமாமனார், மாமியார், தாய்,தந்தை, மகன், மகள், மருமகன், மருமகள், சகோதர, சகோதரிகள் தனக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதற்குத் தகுந்தாற் போல் நடந்து கொள்ள வேண்டும். வரம்பு மீறும் பொழுதுதான் பிரச்சனை ஏற்படுகின்றது.
மாமியார் தான் மருமகளாக இருக்கும்பொழுது ,நம் மாமியார் இப்படி நடந்து கொண்டால் நன்றாக இருக்குமே ,என்று நினைத்ததை தன் மருமகளிடம் காண்பிக்க வேண்டும். அதைத் தவிர்த்து தான் பட்ட கஷ்டத்தைப் போல மருமகளும் படட்டும் என்று நினைப்பது கூடாது. மருமகள் நாமும் ஒரு நாள் மாமியாராப் போகிறோம் என்று நினைவில் வைத்துக் கொண்டு ,நம் மருமகள் தவறாக நடந்து கொண்டால் கஷ்டம்தானே! நாத்தானாரும் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்குச் சென்றால்.....என்று பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்..
குடும்ப உறுப்பினர்களிடையே ஒருவருக்கொருவர், பொருளாதார நிலைமையைச் சுட்டிக் காட்டி சுடு சொற்களாகவும், மரியாதை குறைவாக நடந்து கொண்டால் காலப்போக்கில் பொருளாதாரத்திற்காக நம்மால் அவமதிக்கப்பட்டவர்கள் செல்வத்திலும், செழிப்பிலும் நம்மைவிட மிஞ்சும் நேரம் வரும். ஆனால் நம்மால் செய்யப்பட்ட அவமானம் ஒருகாலும் மறையவே மறையாது.
நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றால், குடும்பத்து அங்கத்தினர்களின் எல்லோருடைய நிலைமையிலும், நாம் இருப்பதாக பாவித்துக் கொண்டு ,எந்த ஒரு வார்த்தையையும் ,அவசரகதியில் கொட்டிவிடாமல் யோசித்து, அவரவர்கள் இருக்க வேண்டிய இடத்தில், வரம்பை மீறாமல் நடந்து கொண்டால் குடும்பம் ஒரு கோவில்தான். இல்லாவிட்டால் தறி கெட்டு ஓடும் ரேஸ் குதிரையைப் போல், நம் குடும்ப கெளரவம் பறைசாற்றப்படும். குடும்பம் என்ற கோவிலை காப்பாற்றும் பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது.
0
Leave a Reply