யானை புகுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜபாளையம் வனச் சரகங்களுக்கு இடையே உள்ள ராக்காச்சி அம்மன், சேத்துார், விரியன்கோயில், அணைத்தலை ஆறு, கல்லாத்து ஓடை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் முகாமிட்டு இரவு நேரத்தில் மலையடிவார விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
நேற்று முன்தினம் ராஜபாளையம் 6வது மைல் நீர்தேக்கம் கல்குவாரி ஒட்டி வானூத்தி பறம்பு அருகே தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை 40 தென்னங்கன்று குருத்துகள், வளர்ந்த மா மரக்கிளை பாதியாக உடைத்தும், குடிநீர் குழாய்களை உடைத்தும், வாழைக் கன்றுகளை தின்றும் சேதப்படுத்தி உள்ளது. மீண்டும் இவற்றை உருவாக்க லட்சக்கணக்கில் பணமும், காலமும் தேவைப்படும். தகுந்த இழப்பீடு வழங்குவதுடன், யானை புகுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் .
0
Leave a Reply