உணவு பண்டங்கள் தரமாக உள்ளனவா என்பன குறித்து நேரில் கண்டறிவதற்காக நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகன திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று(04.08.2025) உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உணவுகளின் தரம் குறித்து மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், உணவகங்களில் உணவு வகைகள் கலப்படமின்றி தயாரிக்கப்படுகின்றனவா, கடைகளில் விற்கப்படும் உணவு பண்டங்கள் தரமாக உள்ளனவா என்பன குறித்து நேரில் கண்டறிவதற்காக, நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகன திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், இந்த நடமாடும் பகுப்பாய்வுக்கூடம், ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர அரசு விடுமுறைகள் தவிர்த்து, மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களுக்கும், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு பயணம் செய்யும்.
இந்த நடமாடும் உணவு பகுப்பாய்வுக்கூடம் இம்மாதம் 4-ம் தேதி விருதுநகர் நகராட்சி பகுதிகளிலும், 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் விருதுநகர் ஒன்றியத்திலும், 7-ம் தேதி அருப்புக்கோட்டை நகராட்சியிலும், 8-ம் தேதி அருப்புக்கோட்டை ஒன்றியத்திலும், 11-ஆம் தேதி காரியாபட்டி ஒன்றியத்திலும், 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் முறையே நரிக்குடி மற்றும் திருச்சுழி ஒன்றியங்களிலும், 14-ம் தேதி சாத்தூர் நகராட்சியிலும், 18-ம் தேதி வெம்பக்கோட்டை ஒன்றியத்திலும், 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சிவகாசி மாநகராட்சி பகுதிகளிலும், 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் முறையே சிவகாசி மற்றும் வத்திராயிருப்பு ஒன்றியங்களிலும், 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முறையே திருவில்லிபுத்தூர் ஒன்றியம் மற்றும் நகராட்சியிலும், 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் முறையே இராஜபாளையம் நகராட்சி மற்றும் ஒன்றியத்திலும் ஆய்வினை மேற்கொள்ளும்.
அப்போது, நுகர்வோர்கள் தமது வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களின் தரம் குறித்து அறிய உணவு மாதிரி கொடுத்து, அந்த இடத்திலேயே பகுப்பாய்வறிக்கையைப் பெற்றுக்கொள்ளலாம். உணவு வணிகர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், பள்ளிஃகல்லூரிகளில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படவுள்ளது.
எனவே, பொது மக்கள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை செய்வோர் தங்கள் பகுதிக்கு இந்த வாகனம் வரும் போது, உணவுப் பொருட்கள் தொடர்பான தங்களின் சந்தேகங்களைக் கேட்டும், பரிசோதித்தும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply