'தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்” இந்தியாவின் முதல் சர்க்கஸ் கம்பெனி
சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இருந்து வந்தது. நகரங்களில் 100 நாட்களை கடந்தும் சர்க் கஸ் நிகழ்ச்சிகள் நடந்து, மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளன. குறிப்பாக குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள்.
இந்தியாவின் முதல் சர்க்கஸ் கம்பெனியாக 'தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் தொடங்கப்பட்டது. மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விஷ்ணு பந்த் சத்ரே என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் நாட்டின் பல்வேறு இடங்களில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்தியது.
நெருப்பை ஊடுருவி தாண்டுவது, அந்தரத்தில் மனிதர்கள் ஊசலாடுவது, விலங்குகளின் சாகசங்கள், பெண்களின் சாகச நிகழ்ச்சிகள் என பல இடம்பெற்று இருந்தன. இதனை தொடர்ந்து பேரி சர்க்கஸ், கிழக்கு சர்க்கஸ், ஓரியண்டல் சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ், கிரேட் பாம்பே சர்க்கஸ் உள் ளிட்ட சர்க்கஸ் கம்பெனிகள் உருப்பெற்றன.
ஒவ்வொரு சர்க்கஸ் நிகழ்ச்சியிலும் நிறைய கலைஞர்கள் இருப்பார்கள். சர்க்கஸ் கூடாரத்தை காலிசெய்துவிட்டு மற் றொரு இடத்துக்கு செல்வது என்றால், ஓர் ஊரே காலி செய்துவிட்டு செல்வது போன்று இருக்கும். ஆனால்,இப்படி நிறைய பேருக்கு வாழ்வளித்து வந்த சர்க்கஸ் கலை,கால் மாற்றத்தால் சரிவை சந்தித்து வருவது வருந்தந்தக்கது.
0
Leave a Reply