25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வட்டார உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வட்டார உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மண்டலத்தில், செயல்பட்டு வரும் ஆர்.ஏ.430 இராஜபாளையம் வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், ஆர்.ஏ.429 சிவகாசி வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் வி.ஏ.31 விருதுநகர் வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் அந்தந்த வட்டார விவசாயிகள் படிவம் 16 மற்றும் 17 உடன் உரிய பங்குத் தொகை மற்றும் பிரவேச கட்டணம் செலுத்தி தனியரது ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல் மற்றும் 2  புகைப்படத்துடன் விண்ணப்பித்து உறுப்பினராக சேர்ந்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் இது தொடர்பாக, ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆர்.ஏ.430 இராஜபாளையம் வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், முதன்மை நிர்வாக அலுவலர் தொலைபேசி எண் 97863-36396 மற்றும் செயலாட்சியர் 76959-53836 என்ற தொலைபேசி எண்ணிலும், ஆர்.ஏ.429 சிவகாசி வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முதன்மை நிர்வாக அலுவலர் தொலைபேசி எண் 90425-19911 மற்றும் செயலாட்சியர் 94420-58126 என்ற தொலைபேசி எண்ணிலும், வி.ஏ.31விருதுநகர் வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முதன்மை நிர்வாக அலுவலர் தொலைபேசி எண் 98434-81831 மற்றும் செயலாட்சியர் 97151-09134 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News