25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் வருகின்ற 23.07.2025 அன்று ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் வருகின்ற 23.07.2025 அன்று ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது

 தமிழ்நாடு முதலமைச்சர் /  துணை முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி மற்றும்  சிறுபான்மையினர் அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி  தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண்,சே.ச அவர்கள் ஆய்வு கூட்டம் நடத்த வருகின்ற 23.07.2025 (புதன்கிழமை) அன்று விருதுநகர் மாவட்டத்திற்கு வருகைதர உள்ளனர்.

சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளையும் 23.07.2025(புதன்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் மற்றும் கருத்துக்களை கேட்டறியவும் உள்ளனர்.

   அவ்வமயம் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரிதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரிதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்கான தக்க கருத்துக்களையும் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News