25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விருதுநகர் மாவட்டம் புதிய விரிவான மினிபஸ் திட்டத்தினை  அமைச்சர்  அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம் புதிய விரிவான மினிபஸ் திட்டத்தினை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  (16.06.2025) தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய விரிவான மினி பஸ் திட்டம் - 2024-ன் படி பேருந்து வசதி கிடைக்கப்பெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய மினி பஸ் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில்  போக்குவரத்துத் துறை  சார்பில், புதிய விரிவான மினிபஸ்  திட்டத்தினை   மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்  (16.06.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் போக்குவரத்து வசதி அனைத்துப் பகுதிகளுக்கும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின்  வழியில் மினி பஸ்கள் எல்லா கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், கிராமப்புறங்களில் இருக்கும் பொதுமக்கள் கிராமங்களுக்கோ அல்லது நகர்புறங்களுக்கோ வேறு இடங்களுக்கோ சிரமமில்லாமல் செல்லும் வகையில் நமதுதமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  இன்று தமிழகம் எங்கும் மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டத்தின் கீழ் மினி பஸ்களை துவக்கி வைத்துள்ளார்.பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள்/குக்கிராமங்கள் / குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போதுமான பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை அரசு வழங்குவதற்காகவும் 100 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களின் மக்கள் தொகை மற்றும் போதுமான பேருந்து சேவைகள் வழங்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் அல்லது அருகிலுள்ள நகரத்தை அடைய எந்த வழியும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் தமிழக அரசால் மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 1997-ஆம் ஆண்டு பேருந்து வசதி பெறாத குக்கிராமங்களில் வாழும் மக்கள் பேருந்து வசதி பெறும் நோக்கில் மினிபஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, மாவட்டத்திற்கு 250 மினிபஸ் அனுமதிச்சீட்டுகள் என்ற அடிப்படையில், பேருந்துகள் இயக்கப்படாத (Un-Served) வழித்தடத்தில் 16 கி.மீ. மற்றும் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடத்தில் (Served) 4 கி.மீ. என மொத்தம் 20 கி.மீ. என்ற அளவில் வழித்தடம் நீட்டிப்பு செய்து மினிபஸ் இயக்க அனுமதி பெற்றதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் 131 மினி பஸ்கள் அனுமதிச்சிட்டு வழங்கப்பட்டு தற்போது வரை இயக்கப்பட்டு வருகிறது.மேலும், தற்போதைய புதிய திட்டமான New Comprehensive Mini Bus Scheme- 2024-ல் 35 சதவிகிதம் பேருந்து வசதி உள்ள பகுதியும், 65 சதவிகிதம் பேருந்து போக்குவரத்து அல்லாத கிராமங்களுக்கும் 25 கிலோ மீட்டர் சுற்றளவில் இயக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, மாவட்டத்தில் சிற்றுந்து வசதி ஏற்படுத்த 38 வழிதடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 6 சிற்றுந்துகளுக்கு புதிய அனுமதி சீட்டு 15.06.2025 அன்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிற்றுந்து வழித்தடங்களில் அரசு வழிகாட்டுதலின்படி 11 சிற்றுந்துகள் வழிதடம் நீட்டிப்பு செய்து இயக்க (Migration) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.      

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *