25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சிவகாசி - விருதுநகர் சாலையினையும், அழகாபுரி - விருதுநகர் சாலையினையும் இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக  மேம்படுத்தும் பணிகளுக்கு  அமைச்சர் பெருமக்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகாசி - விருதுநகர் சாலையினையும், அழகாபுரி - விருதுநகர் சாலையினையும் இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகளுக்கு அமைச்சர் பெருமக்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகரில் (26.02.2026) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில்,  ரூ.96 கோடி மதிப்பில் சிவகாசி - விருதுநகர் சாலையினையும், ரூ.85 கோடி மதிப்பில் அழகாபுரி - விருதுநகர் சாலையினையும் இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மொத்தம் ரூ.181 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள்,  சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும்  சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காவும், விரிவுபடுத்துவதற்காவும், சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலையான திருவில்லிபுத்தூர் -சிவகாசி - விருதுநகர் - அருப்புக்கோட்டை- திருச்சுழி-நரிக்குடி- பாத்திப்பனூர் சாலை மிக முக்கியமான மற்றும் நீளமான சாலையாகும். இச்சாலையானது சுமார் 103 கிமீ விருதுநகர் மாவட்டத்திலும், 6 கி.மீ இராமநாதபுரம் மாவட்டத்திலும் உள்ளது.இந்த சாலையானது தென்காசி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய நகரங்களிலிருந்து மக்கள் ராமேஸ்வரம் செல்வதற்கு மிகவும் முக்கியமான சாலையாகும்.

          விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இந்த மாநில நெடுஞ்சாலையான திருவில்லிபுத்தூர் - சிவகாசி - விருதுநகர் - அருப்புக்கோட்டை- திருச்சுழி - நரிக்குடி -பாத்திப்பனூர் சாலையில் 103 கி.மீ நீளத்தில் முதன் முதலாக ஆணைக்குட்டத்திலிருந்து ஆமத்தூர் வரை 5 கிமீ நீளத்திற்கு ரூ.30 கோடி மதிப்பிலும், ஆமத்தூரிலிருந்து விருதுநகர் வரை ரூ.66 கோடி மதிப்பில் 9 கிமீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்துவதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இரண்டவதாக, வத்றாப்பிலிருந்து அழகாபுரி வழியாக விருதுநகர் வரை உள்ள மாநில நெடுஞ்சாலையான வத்றாப் - மகாராஜபுரம்- அழகாபுரி - விருதுநகர் சாலையில் அழகாபுரியில் உள்ள நான்கு வழிச்சாலையையும், விருதுநகரில் உள்ள நான்கு வழிச்சாலையையும் இணைக்கும் பொருட்டு, அழகாபுரி - விருதுநகர் இடையே உள்ள 20 கிமீ நீளமுள்ள சாலையை தற்போது விருதுநகரிலிருந்து எரிச்சநத்தம் அருகில் உள்ள சமத்துவபுரம் வரை 12.60 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக அமைப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

   இச்சாலைகள் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு பயண நேரம் குறையும் என தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய மகத்தான ஆட்சியில் மிகச் சிறப்பான திட்டங்களில் ஒன்றாக விருதுநகர் மாவட்டத்தின் உடைய தலைநகராக இருக்கக்கூடிய விருதுநகரையும் மாவட்டத்தினுடைய முக்கிய தொழில் கேந்திரமாக இருக்கக்கூடிய சிவகாசியையும் மாநில நெடுஞ்சாலையாக இருக்கக்கூடிய இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தக்கூடிய சிறப்பான பணிக்கும்,

     அதுபோல மதுரையில் இருந்து கொச்சி வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து விருதுநகரை இணைக்க கூடிய வகையில் அழகாபுரியிலிருந்து எரிச்சநத்தம், செங்குன்றாபுரம் வழியாக விருதுநகரை இணைக்கக்கூடிய சாலையையும் நான்கு வழி சாலையாக அகலப்படுத்தக்கூடிய சிறப்பான பணிக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.இந்தப் பணிகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது, அனைவரும் அறிந்ததே. விருதுநகரையும் சிவகாசியையும் இணைக்கக்கூடிய சாலையை முதற்கட்டமாக சிவகாசியில் இருந்து ஆமத்தூர் வரை ஒரு பகுதியாகவும், ஆமத்தூரில் இருந்து விருதுநகரை இணைக்கக் கூடிய சாலையை மறு பகுதியாகவும் என இந்த இரண்டு பணிகளும் ஏறத்தாழ ரூ.96 கோடி மதிப்பீட்டில் மிகச் சிறப்பான வகையிலே இந்த இருவழிச் சாலையானது நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட இருக்கின்றது.அதுபோல அழகாபுரியிலிருந்து விருதுநகரை இணைக்கக் கூடிய சாலை ஏறத்தாழ ரூ.85 கோடி மதிப்பீட்டில் மணிகள் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

சிவகாசி மாநகரத்தில் சுற்றுவட்ட சாலைப்பணிகளில் ஒரு பகுதி முடிவுற்று மற்றொரு பகுதி பணிகள் தொடங்கியிருக்கிறது. அதுபோல சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் முடிவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சியில் நீண்ட காலமாக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய கோரிக்கையான திருத்தங்கள் மேம்பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, அந்த பணிகளும் துவக்கப்பட்டுள்ளது.எனவே நம்முடைய  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. திட்டங்களை அறிவிப்பதோடு மட்டுமல்லாமல், அறிவிக்கப்பட்டிருக்கக் கூடிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் முறையாக செய்யப்பட்டு அந்தப் பணிகளும் துவக்கி வைக்கப்பட்டு இருக்கக்கூடிய காட்சியை நாம் காண்கின்றோம்.எனவே  முதலமைச்சர் அவர்களுடைய தலைமையிலான இந்த அரசுக்கு மாவட்ட மக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (விருதுநகர்) திருமதி பாக்கியலெட்சுமி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News