25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


முஸ்லீம் நடுநிலைப்பள்ளியை  அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, புதிதாக உயர்நிலை வகுப்புகளுக்கு சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு  அனுமதி ஆணைகளை  அமைச்சர்கள்  துவக்கி வைத்தார்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முஸ்லீம் நடுநிலைப்பள்ளியை அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, புதிதாக உயர்நிலை வகுப்புகளுக்கு சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு  அனுமதி ஆணைகளை அமைச்சர்கள் துவக்கி வைத்தார்கள்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் நகராட்சி பாவாலி சாலையில் உள்ள முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில் (17.09.2025) பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,   வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் ஆகியோர் முஸ்லீம் நடுநிலைப்பள்ளியை  அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, புதிதாக உயர்நிலை வகுப்புகளுக்கு சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு  அனுமதி ஆணைகளை  வழங்கி துவக்கி வைத்தார்கள்.

  மேலும், மாநில நிதிக்குழு பள்ளி மேம்பாட்டு மானியம் மற்றும் நகராட்சி கல்வி நிதி மூலம் ரூ.1.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறைகளை குத்திவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு தமிழகத்தின் அனைத்து தரப்பு மாணவர்களும் முழுமையான கல்வி பெற்று பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் கல்விக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி, 2025-26 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது, தமிழகத்தில் உள்ள 14 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்த 1 முதல் 5-ம் வகுப்புகள் பிரிக்கப்பட்டு தனி தொடக்கப் பள்ளிகளாக நிலை உருவாக்கப்படும் எனவும், தரம் உயர்த்தப்பட்டுள்ள 14 பள்ளிகளில் உள்ள தலா 3 பட்டதாரி ஆசிரியர்களோடு, மேலும் தலா 2 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு, அவை உபரி ஆசிரியர்களின் பணிநிரவல் மூலம் நிரப்பலாம் எனவும், அந்த பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர் பணியிடங்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக நிலை உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, விருதுநகர் நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியானது 08.06.1948 முதல் நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்தது. இப்பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட 14 ஆசிரியர்கள் உள்ளனர். 519 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.தற்போது இந்த பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று  அமைச்சர் பெருமக்கள் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.மேலும், மாநில நிதிக்குழு பள்ளி மேம்பாட்டு மானியம் மற்றும் நகராட்சி கல்வி நிதி மூலம் ரூ.1.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறைகளையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் திரு.இரா.மதன்குமார், விருதுநகர் நகராட்சி ஆணையாளர் செல்வி சுகந்தி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.ஆர்.மாதவன், அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News