கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் வாரியத்தில் விடுப்பட்டவர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு இரண்டாம் கட்டம் முகாம் 19.06.2025 அன்று நடைபெற உள்ளது
கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதவரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர்களிடமிருந்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளை தேர்வு செய்து அவர்கள் சுயதொழில் செய்து சுயமரியாதையுடன் சமூதாயத்தில் வாழவும் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் எளிதாக பெறுவதற்கு இந்த கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பயனாளிகள் இதில் பயன் பெறுவதற்கு tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் முதலில் உறுப்பினர்களாக பதிவு செய்ய வேண்டும். இதற்கான முதற்கட்ட முகாம்கள் கடந்த 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய தேதிகளில் 450 பஞ்சாயத்துகளில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக ‘கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்வு கன்னிகள், மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர்களை கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் வாரியத்தில், விடுப்பட்ட பெண் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு இரண்டாம் கட்டம் முகாம்” ஆனது அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வருகிற 19.06.2025 -அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.30 வரை உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது. மேலும் இம்முகாமிற்கு வருகை தரும்பொழுது கீழ்கண்ட ஆவணங்களை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1. விதவைசான்று/ஆதரவற்றவிதவை சான்று கணவரால் கைவிடப்பட்டவர் சான்று
2. தொலைபேசி எண்
3. குடும்ப அட்டை நகல்
4. ஆதார் நகல்
5. வருமான சான்று
6. சாதி சான்றிதழ்
இம்முகாமினை விடுப்பட்ட பயனாளிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
0
Leave a Reply