25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


வாழைப்பழத்தின் காம்பு பகுதி கருக்காமல் இருக்க....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாழைப்பழத்தின் காம்பு பகுதி கருக்காமல் இருக்க....

காய்கறி நறுக்குறதிலேயே கஷ்டமான காரியம் கொத்தவரங்கா, பீன்ஸ், வெண்டைக்காய் போன்றவற்றை நறுக்குவது தான். இவைகளை சுலபமாக நறுக்க காயைசுத்தம்செய்தபிறகுமுதலில்காய்களைஒன்றாக சேர்த்து வைத்து ரப்பர் பேண்ட் போட்ட பிறகு நறுக்கி ஒரே நேரத்தில் நிறைய காய்களை சுலபமாக நறுக்கி விடலாம்.

இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும், இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும். தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொறு  மொறுப்பாக வரும்.

வெந்தயத்தை கறுப்பாக வறுத்து தூள் செய்து காப்பி பொடியில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை வியாதிஉள்ளவர்களுக்கு நல்லது.

சாம்பார் கீரை, புளிப்பு கூட்டு போன்றவற்றை கொதித்து இறக்கும் சமயம் துளி வெந்தய பொடி தூவி இறக்கினால் நல்ல வாசனையாக இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியம்.

வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைத்தால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News