கர்நாடக வீராங்கனை திலோத்தமா தேசிய துப்பாக்கிசுடுதலில்மொத்தம் 466.9 புள்ளி எடுத்து தங்கம் வென்றார்!
மத்திய பிரதேசத்தின் போபாலில் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் போட்டி நடந்தது. கர்நாடக வீராங்கனை திலோத்தமா, 591 புள்ளியுடன் தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து, பைனலுக்குள் நுழைந்தார்.
இதில் சிறப்பாக செயல்பட்ட திலோத்தமா 17, மொத்தம் 466.9 புள்ளி எடுத்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். கேரளாவின் விதர்சா, (462.9), ரயில்வேயின் அயோனிகா (451.8) அடுத்த இரு இடம் பெற்று, வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
0
Leave a Reply