25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 24 திருநங்கைகளுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வீடுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 24 திருநங்கைகளுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வீடுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், இ.குமாரலிங்கபுரம் கோவில்புலிகுத்தி கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில்,கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 24 திருநங்கைகளுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I.A.S. அவர்கள் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார். அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கும் அரசு திட்டங்கள் சென்றடைய வேண்டும்  என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என  தெரிவித்ததார். 

அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள 24 திருநங்கைகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.திருநங்கைகள் என்று முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் ஆட்சியில் தான் முதன்முதலில் பெயர் சூட்டப்பட்டது. திருநங்கைகள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். தாங்கள் ஆரோக்கியத்தை கவனித்து நல்ல முறையில் தங்களுக்கு வழங்கப்படும் வீடுகளை பயன்படுத்த வேண்டும்.திருநங்கைகளை நாம் அரவணைத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் எந்த அளவிற்கு முயற்சி எடுத்து வருகிறதோ, அதே அளவிற்கு நாமும் முயற்சி எடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

நமது மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு என்று அமையக்கூடிய இரண்டாவது தனிக் குடியிருப்பாக இது அமைந்திருக்கிறது. இது நிச்சியமாக வேறு எந்த மாவட்டத்திலும் இயலாத அளவிற்கு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு அமைச்சர் அவர்கள் மிகுந்த உறுதுணையோடு இருந்தார்கள். ஏனென்றால், இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் அரசால் வழங்கக்கூடிய தொகையானது ரூபாய் 3,50,000/-  ஆகும்.இந்த ரூ.3,50,000ஃ- த்தினை இரண்டு மூன்று தவணைகளாக அந்த பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, அவர்களே அவர்களுடைய வசதிக்கேற்ப, தேவைக்கேற்ப கட்டிக்கொள்ளக்கூடிய வாய்ப்பை கலைஞர் கனவு இல்லம் திட்டம் வழங்குகிறது.  ஆனால், அதே நேரத்தில் சமூகத்தில், பொருளாதாரத்தில், மிகுந்த நலிவுற்ற, ஒரு நிலையான வருமானம் இல்லாத விளிம்பு நிலை மனிதர்களாக இருக்கக்கூடிய திருநங்கைகளுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஒரு நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது.

ஒரு குழுவாக அமைந்து, அந்த குழுவினுடைய ஒத்துழைப்போடு ஒரு வீடு கட்டி முடிப்பதற்கு உண்டான செலவுகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் மானியத்துடன் மீதமுள்ள தொகைக்காக சமூக பொறுப்பு நிதியை பெற்று தலா ரூ.6.50 லட்சம் மதிப்பில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தை மிக நேர்த்தியாகவும், அழகாகவும், மிகுந்த தரத்தோடு முடிப்பதற்கு அமைச்சர் அவர்கள் உறுதுணையோடு இருந் தார்.. அதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்., இந்த திருநங்கைகளுக்கு அரசின் உடைய திட்டங்களை எல்லாம் பயன்படுத்தி, அவர்களின்; வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான சிறப்பான திட்டங்களை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செயல்படுத்தும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I.A.S அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.இரா.தண்டபாணி, செயற்பொறியாளர் திருமதி வெண்ணிலா, உள்ளாட்சி பிரதிநிதிகள், திருநங்கைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News