25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 1809 புதிய குளங்கள் அமைக்கும் பணிகளில்,  1512 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 1809 புதிய குளங்கள் அமைக்கும் பணிகளில், 1512 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மேற்கொண்ட ஆய்வுப் பயணத்தின் போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், புதிய சமுதாயக்குளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் கிராமப்புறங்களில் குடிநீர் வசதி மற்றும் நீர்ப்பாசன வசதிக்கு உதவும் சமுதாயக்குளம் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இந்தத் திட்டம் மூலம் கிராமங்களில் குளங்கள், ஏரிகள் மற்றும் பிற நீர்த்தொழில் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

 விருதுநகர் மாவட்டத்தில் புதிய சமுதாயக்குளங்கள் அமைக்கும் பணிகளில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.19 கோடி மதிப்பிலான 154 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 143 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 11 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.19.58 கோடி மதிப்பிலான 193 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 168 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 25 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.22.33 கோடி மதிப்பிலான 127 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 114 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 13 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.17.11 கோடி மதிப்பிலான 129 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 104 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 25 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.12.12 கோடி மதிப்பிலான 175 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 146 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 29 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.15.49 கோடி மதிப்பிலான 167 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 116 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 51 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.10.95 கோடி மதிப்பிலான 125 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 102 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 23 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.11.55 கோடி மதிப்பிலான 191 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 161 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 30 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14.45 கோடி மதிப்பிலான 189 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 161 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 28 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.10.97 கோடி மதிப்பிலான 256 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 202 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 54 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.22.65 கோடி மதிப்பிலான 103 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 95 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 8 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.ஆக மொத்தம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் ரூ.176.21 கோடி மதிப்பில் 1809 புதிய குளங்கள் அமைக்கும் பணிகளில், 1512 பணிகள் முடிக்கப்பட்டு, 297 பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், சின்ன ஓடைபட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.25 இலட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்குளம் அமைக்கப்பட்டு, குளம் தூர்வாரப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்து, அரசு அலுவலர்கள் மற்றும் திட்டப் பணியாளர்களிடம் கலந்துரையாடினார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News