சாத்தூர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து அவர்கள் கள ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் மூலம் 18.06.2025 நேற்று காலை 9 மணி முதல் 19.06.2025 இன்று காலை 9 மணி வரை நடைபெற்றது.
இந்த முகாமின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி இரண்டாம் நாளான இன்று சாத்தூர் வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.சாத்தூர் நகராட்சியில், நென்மேனி சாலை பகுதியில் தண்ணீரில் கலந்துள்ள குளோரின் அளவு குறித்து ஆய்வு செய்து, குடிநீர் விநியோகம் செய்யப்படும் முறை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து, அண்ணா நகர் பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு சுழற்சி முறையில் கூட்டுத்துப்புரவு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
பின்னர், மேலக்காந்தி நகர் பகுதியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், செயல்பட்டு வரும் சமையலறை பகுதியனை பார்வையிட்டு, அங்கு மாணவர்களுக்கு தயார் செய்யப்பட்டுள்ள காலை உணவினை உட்கொண்டு, உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.இந்த நிகழ்வின் போது, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், சாத்தூர் நகராட்சி ஆணையாளர் திருமதி ஜெகதீஸ்வரி, சாத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.குருசாமி, வட்டாட்சியர் திரு.ராஜாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply