25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பல்கலை விளையாட்டு 32வது சீசன் போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பல்கலை விளையாட்டு 32வது சீசன் போட்டிகள்

பல்கலை விளையாட்டு32வது சீசன் ஜெர்மனியில்,நடக்கிறது. இந்தியா சார்பில்90 பல்கலை., யில் இருந்து300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா20 வயது வீராங்கனை வைஷ்ணவி, பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் காலிறுதியில் ,ஜெர்மனியின் சினா ஹெர்மானை எதிர்கொண்டார். இதில் வைஷ்ணவி, 6-1, 6-4 என நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு  முன்னேறினார். 

கலப்பு இரட்டையரில் இந்தியாவின் வைஷ்ணவி, அதர்வாஜோடி6,2,7,5 என அமெரிக்காவின் ஒலிவியா, ஜெர்ரி ஜோடியை வென்றது. ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மான்கேஷர்வானி, 6,2, 5,7, 4,10 என தாய்லாந்தின் ஸ்ரீராட்டிடம் தோல்வியடைந்தார்.

பெண்களுக்கான100 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் அபிநயா(தமிழகம்),5வது தகுதிச்சுற்றில் களமிறங்கினார். இவர்11.88 வினாடி நேரத்தில் வந்து 2வது இடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்களுக்கான வட்டு எறிதலில் இந்திய வீரர் அபிமன்யு, 52.85மீ., துாரம் எறிந்து 12வது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறினார்.

பெண்கள் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஆன்சி சோஜன் (6.20 மீ.,), 10 வது இடம் பிடித்து பைனலுக்கு தகுதி  பெற்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News