டபிள்யு. டி.ஏ., 'பைனல்ஸ்' டென்னிஸ் தொடரில்அமெரிக்காவின் கோகோ காப் வெற்றி.
டபிள்யு. டி.ஏ., 'பைனல்ஸ்' டென்னிஸ் தொடர் சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் ,உலகின் 'டாப்-8' வீராங்கனைகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றனர்.இதன் 'ஸ்டெபி கிராப்' பிரிவில் உலகின் 'நம்பர் -1' சபலென்கா (பெலா ரஸ்), 'நடப்பு சாம்பியன்' கோகோ காப் (அமெ ரிக்கா), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ஜாஸ்மின் பாவோலினி (இத்தாலி) இடம் பெற்றுள்ளனர்.
முதல் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சகவீராங்கனை ஜெசிகா பெகுலாவிடம் தோல்வியடைய, இரண்டாவது போட்டியில் கோகோ காப், ஜாஸ் மின் பாவோலினியை 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று,முதல் வெற்றியைபதிவு செய்தார்.2வது மற்றொரு போட்டியில் அரினா சபலென்கா 6-4, 2-6, 6-3 என ஜெசிகா பெகுலாவை தோற்கடித்து, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவுசெய்தார்.
0
Leave a Reply