சித்திரையில் வெயில் ஏன் வாட்டுகிறது?
சித்திரை ஆரம்பித்து விட்டது. அப்படியானால் இனி வெயிலும் சுட்டெரிக்க தொடங்கிவிடும்.நாம் வாழும் பூமியில் வெயில், மழை, குளிர் என மாறி மாறி பருவங்கள் வருவதற்கு பூமியின் சுழற்சிதான் காரணம். பூமி தன்னை தானே சுற்றிக்கொண்டு, சூரியனை ஒரு முறை முழுமையாக சுற்றி முடிக்க 365 நாட்கள் 5 மணி நேரம் 48 நிமிடம் 45 வினாடிகள் ஆகிறது.
இது சுமார் 365.2422 நாட்கள் என்று கணக்கிடப்படுகிறது. ஆனால் நாம் பயன்படுத்தும் கிரெகோரியன் நாட்காட்டியில், ஒரு ஆண்டு என்பது 365 நாட்கள்தான் இருக்கும். அந்த கூடுதல் 0.2422நாட்கள் ஒவ்வொரு ஆண்டும் சேரச் சேர நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாம் ஒரு நாளைச் சேர்க்கிறோம். அது தான் லீப் ஆண்டு என சொல்கிறோம். அந்த ஆண்டில் தான் பிப்ரவரி மாதத்தில் 29-ந் தேதி வரும்.
தமிழகத்தின் இளவேனில் காலத்தில் சூரியன் சற்றே தூரமாக இருந்தாலும், அதன் கதிர்கள் பூமியின் மீது நேராக விழுவதால் வெப்பம் அதிகமா கிறது. அதுவே முன்பனி காலத் தில் பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள இடைவெளி குறைவாக இருந்தாலும், அப்போது சூரிய கதிர்கள் சாய்வு நிலையில் தான் பூமியில் விழுகிறது. அதனால் வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான காலநிலை உருவாகிறது. இந்த அறிவியல் அடிப்படையில தான் சித்திரை-வைகாசி மாதங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது.
0
Leave a Reply