25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பெண்கள் உலகக்கோப்பை செஸ் போட்டி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்கள் உலகக்கோப்பை செஸ் போட்டி.

ஜார்ஜியாவின் பதுமி நகரில் பெண்கள் உலகக்கோப்பை செஸ் போட்டி கால் இறுதியில் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனை கோனெரு ஹம்பி 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் யுக்  சின் சாங்கை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்த போட்டியில் அரைஇறுதியை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். இன்று நடைபெறும் அரைஇறுதியில் ஹம்பி, சீனாவின் லீ டிங்ஜியை சந்திக்கிறார்.

 மற்றொரு ஆட்டத்தில் தமிழக வீராங்கனை ஆர். வைஷாலி 0.5-1.5 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் டான் ஜோங்யிடம் தோற்று வெளியேறினார். இன்னொரு கால்இறுதியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், சகநாட்டவர் ஹரிகாவை எதிர்கொண்டார். முதல் நாளில் இரு ஆட்டமும் 'டிரா' ஆன நிலையில் நேற்று டைபிரேக்கரில் திவ்யா தேஷ்முக் 2-0 என்ற கணக்கில் ஹரிகாவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார். அரைஇறுதியில் திவ்யா தேஷ் முக், முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜோங்யிடன் சந்திக்கிறார். ஹம்பி, திவ்யா அரைஇறுதிக்கு வந்திருப்பதன் மூலம் இவர்களில் ஒருவர் குறைந்தது பெண்கள் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதி பெறுவர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News