இத்தாலியின் ஜானிக் சின்னர் யு.எஸ்.ஓபன் காலிறுதியில் …..
யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் உலகின் 'நம்பர் -1' வீரர், இத்தாலியின் ஜானிக் சின்னர், 23வது இடத்திலுள்ள கஜகஸ்தானின் அலெக் சாண்டர் பப்ளிக்கை சந்தித்தார். முதல் செட்டை 6-1 என வென்ற சின்னர், அடுத்த இரு செட்டையும் 6–1, 6–1 என எளிதாக கைப்பற்றினார்.
மூன்றாவது முறையாகஇத்தொடரில் ஒரு மணி நேரம் 23 நிமி டம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் சின்னர், 6–1, 6–1, 6–1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.
அமெரிக்காவின் 45 வயது வீனஸ்வில்லியம்ஸ்,கன டாவின் லேலா ஜோடி, பெண்கள்இரட்டையர் மூன்றாவது சுற்றில் 6-3, 6-4 என ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரோவா, சீனாவின் ஷுவாய் ஜங் ஜோடியை வென்று கால் இறுதிக்கு முன்னேறியது.
இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் ,ஆஸ்திரேலியாவின் மைக்கேல் வீனஸ் ஜோடி, ஈகுவடாரின் எஸ்கோபர், மெக்சிகோவின் ரேய்ஸ் வரேலா ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம், 26 நிமிடம் நடந்த போட்டியில் காலிறுதிக்கு முந்தையசுற்றுக்குள் பாம்ப்ரி ஜோடி 6-1, 7-5 என வெற்றி பெற்று, நுழைந்தது.
0
Leave a Reply