ஒரே ஆப்… 500 அரசு சேவைகள்!
கைபேசியிலேயே சுமார் 500 அரசு சேவைகளை பெறும் வகையில், ரூ.5 கோடி மதிப்பில் ‘வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம்:
- பிறப்புச் சான்றிதழ்
- குடும்ப அட்டை தொடர்பான சேவைகள்
- ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல்
- பல்வேறு அரசு சேவைகள்
போன்றவற்றை ஒரே இடத்தில் பெறும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
மேலும், AI தமிழ் மொழி ஆய்வகம், e-Office AI கருவி, சுகாதாரம் மற்றும் வேளாண்மைக்கான AI மாதிரிகள் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவோருக்கான இலவச AI சேவைகள், ரூ.50 கோடி மதிப்பிலான Deep-Tech Innovation மற்றும் AI சிறப்பு மையங்கள் உருவாக்கும் திட்டங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
0
Leave a Reply