நிலவில் சோலார் மின்சாரம் தயாரிக்க புளூ ஆர்ஜின் திட்டம்.
நிலவில் சூரிய ஒளி தொடர்ந்து கிடைக்காததால், அங்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்க அமெரிக்காவின் 'புளூ ஆர்ஜின்' தனியார் நிறுவனம் தீர்வுகண்டுள்ளது.
- திட்டம்: நிலவின் தென் துருவப்பகுதிக்கு அருகே 66 அடி உயரத்தில் 'பவர் டவர்' (Power Tower) என்ற சோலார் டவரைச் செங்குத்தாக நிறுவுதல்.
- இலக்கு: 10 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்தல்.
- இடம் தேர்வு: தென் துருவப்பகுதியில் நீண்ட நேரம் சூரிய ஒளி படும் உயரமான இடங்கள் இருப்பதால் இப்பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- எதிர்காலத் திட்டம்: மேலும் பல சோலார் டவர்களை நிறுவி, லேண்டர் மட்டுமன்றித் தொலைவில் உள்ள மற்ற உபகரணங்களுக்கும் மின்சாரம் வழங்குவது.
0
Leave a Reply