தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் “இரத்த சோகை இல்லாத கிராமம்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், (27.09.2024) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் “இரத்த சோகை இல்லாத கிராமம்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழானை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.
கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் ஆகியோர் போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் 2024-25-ம் நிதி ஆண்டிற்கு “இரத்த சோகை இல்லாத கிராமம்” குறித்த சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழாவாக விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு ஊராட்சி அளவிலும், வட்டார அளவிலும், பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களைக் கொண்டு மாவட்ட அளவில் சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா இன்று நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு. திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply