முதலமைச்சரின் விடியல் பயணத்திட்டம் மூலம் 11.37 கோடி மகளிர்கள் திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர் .
முதலமைச்சரின் விடியல் பயணத்திட்டமானது, அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் இல்லதரசிகள், உயர்கல்வி பயிலும் மாணவிகள், பணிபுரியும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லா பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தால், பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள்.
இத்திட்டமானது தமிழகத்தை பின்பற்றி கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரையில், அனைத்து தரப்பு மக்களிடத்திலும் இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பணிபுரியும் பெண்கள் மட்டுமின்றி, சுயதொழில் செய்யும் பெண்கள், இலவச பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள், குழந்தைகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் தாய்மார்கள், குழந்தைகளை நாள்தோறும் பள்ளிக்கு அழைத்து செல்லும் பெண்கள், வயதான பெண்கள்; மற்றும் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டம் மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது.
அரசுப்பேருந்துகளில் அனைத்து மகளிர் , திருநங்கைகள் , மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் இந்த திட்டத்தின் வாயிலாக 445 கோடி முறை பயணம் செய்து மாதந்தோறும் ரூ.888 வரை சேமிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், இத்திட்டத்தின் வாயிலாக மூன்று ஆண்டுகளில் 11.27 கோடி மகளிர்கள், 73,552 திருநங்கைகள், 9.44 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 11.37 கோடி நபர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.
மேலும், பொது போக்குவரத்து பயணங்களை ஊக்குவிப்பதும் பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்தாக அமைந்துள்ளதால், அனைத்து தரப்பு மக்களிடமும் மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
0
Leave a Reply