முதலாம் ஆண்டு பயிலும் 150 மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் நிகழ்ச்சி
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் (23.10.2024) வெள்ளை அங்கி வழங்கும் நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு பயிலும் 150 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வெள்ளியங்கிகளை வழங்கினார்.
முதலாம் ஆண்டு மாணவர்களான நீங்கள் இன்று இருக்கக்கூடிய நிலைமை என்பது எவ்வளவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. இந்த வாய்ப்பு கிடைக்காத லட்சக்கணக்கானவர்களுக்கு இது எவ்வளவு பெரிய கனவு என்பதை நீங்கள் நிச்சயமாக தெரிந்திருப்பீர்கள்.இந்த சமுதாயத்தில் மருத்துவ துறை எவ்வளவு பாதைகளை கடந்து வந்திருக்கின்றது, எவ்வளவு பொறுப்புகளை கடந்து வந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்க தொடங்கினீர்கள் என்றால், எவ்வளவு பொறுப்புக்கு உரியவர்கள் நீங்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
எனவே நாளை சமூகத்தின் மதிப்பு மிக்க பொறுப்பு மிக்க மருத்துவர்களாக நீங்கள் உருவாவதற்கு நீங்கள் என்னென்னவெல்லாம் தியாகங்களை செய்ய வேண்டும். உங்கள் தகவமைப்புகளை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் தொடங்குவதற்காக தான் இந்த நிகழ்ச்சி. திருவள்ளுவர் அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் என்ற திருக்குறளில், ஒரு பெரிய கோட்டையை கூட நம்முடைய எதிரிகளால் அழித்து விட முடியும். ஆனால் நாம் பெற்ற அறிவானது ஒருபோதும் உனக்கு நேரக்கூடிய துன்பத்தில் உன்னை பாதுகாக்கும் என்று கூறுகிறார். அதே போல் தான் நீங்கள் அனைவரும் அறிவில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும்
மேலும், மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் நாம் பெற்றுள்ள அறிவினால் எந்த ஒரு பயனும் கிடையாது என்றும் கூறுகிறார். இந்த இரண்டையும் நீங்கள் அனைவரும் முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும்,நீங்கள் அனைவரும்; மனித குல வரலாற்றில் அடுத்து வரக்கூடிய ஐம்பது நூற்றாண்டுகளில் இந்த சமூகத்தில் உங்களுடைய பங்களிப்பை மிக சிறப்பாக செயலாற்ற வேண்டும். இந்த சமூகத்தில் மனித குலத்தின் போக்கை தீர்மானிக்க கூடியவர்களாக 120 கோடி மக்கள் தொகை இருக்கக்கூடிய இந்த நாட்டில் ஒவ்வொரு துறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலர் தான் துறையினுடைய போக்கை எதிர்காலத்தில் தீர்மானிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள்.
எந்த துறையாக இருந்தாலும், ஒரு சிலர்; தான் அவர்கள் வாழக்கூடிய காலகட்டத்திலும், அதற்கு அடுத்த வரக்கூடிய சில நூற்றாண்டுகளுக்கும், இந்த சமுதாயமும், மனித குலமும் தான் பாதையை தீர்மானிக்கிறது. அவர்கள் அறிவில் சிறந்தவர்களாக இருக்கக்கூடியது முக்கியம் . அதை விட இந்த மனித குலத்தின் அடிப்படை பண்புகளான அனுதாபம், ஒப்பிடுதல் ஆகியவை இருப்பது தான் மிக முக்கியம்.உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து என்ற திருக்குறளில், உதவி என்பது செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை. அந்த உதவியை பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும் என்று கூறுகிறார். இதனை தான் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளும் கூறுகின்றார்கள்.
எனவே நம்முடைய பணியில் அர்ப்பணிப்பு என்பதும், தினசரி புதிதாக கற்றுக் கொள்ளுதல் என்பதும் மிக மிக முக்கியம். மருத்துவத்துறையில் தான் துறைகளினுடைய தொடர்ச்சியான வளர்ச்சிகளை வரலாற்று ரீதியாக பார்த்துக் கொண்டு வருகிறோம்.
மருத்துவத்தொழில் மட்டும் தான் தொடர்ச்சியாக அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கு உங்களுடைய பண்பை, அறிவை, குண நலன்களை நீங்கள் எப்படி பயன்படுத்த போகிறீர்கள் என்பதற்கான நாற்றாங்காலாக அறிவை எப்படி விரிவு படுத்தப் போகிறீர்கள் என்பதற்கான வாய்ப்பாக கல்லூரி வாழ்வை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
இதில் சக மனிதர்களை மதித்தல், புரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பண்புகளை நீங்கள் நிச்சயமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. அதில் உங்களுக்கான பொறுப்பும் உள்ளது. அந்த பொறுப்புகளையும், கடமைகளையும் நீங்கள் புரிந்து கொள்வதற்காக தொடக்கமாகத்தான் இந்த விழா என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவத்துறை அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள், பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply