காளான் சுக்கா, (mushroom chukka ).
தேவையான பொருட்கள் -
400 கிராம் பட்டன் காளான்,20 சின்ன வெங்காயம்,
1 டேபிள்ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்,1 கொத்துகறிவேப்பிலை,
1தக்காளி,தேவையான அளவு எண்ணெய்,
பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, ஏலக்காய்-தலா 1,5-6 வரமிளகாய்,
மல்லி, மிளகு, சீரகம், சோம்பு -தலா ஒரு ஸ்பூன் ,மஞ்சள் தூள்,
தேவையானஅளவு உப்பு,10 முந்திரி- ( தேவைப்பட்டால்).
செய்முறை -
முதலில் வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எண்ணெய் சேர்க்காமல், வெறும் வாணலியில் வறுத்து எடுத்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து எண்ணை காய்ந்ததும், கடுகு கருவேப்பிலை சேர்த்து ,நன்கு பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரைவதக்கவும்.பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி ஐந்து நிமிடம் மிதமான சூட்டில் வேக விடவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து நறுக்கிய காளானை சேர்த்து தேவையான அளவு உப்புசேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விடவும்.
காளானில் உள்ள தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து மேலும் விருப்பப்பட்டால், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து விடவும். சுவையான மஷ்ரூம் சுக்கா தயார் .
0
Leave a Reply