25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


2026-2027 ஆம் ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்பதிவு செய்வதில் இருந்த இடர்பாடுகள் களையப்பட்டுள்ளதால் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெறலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2026-2027 ஆம் ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்பதிவு செய்வதில் இருந்த இடர்பாடுகள் களையப்பட்டுள்ளதால் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெறலாம்.

2026-27 ஆம்  ஆண்டில் ராபி சம்பா-II பயிர்களுக்கு தேசிய பயிர் காப்பீடு வலைதளத்தில் நில உரிமையாளர்கள் பதிவு செய்து கொள்ள விவசாயி அடையாள எண்ணும்(FID), குத்தகை விவசாயிகள் பதிவு செய்து கொள்ள நில உரிமைதாரர்களிடமிருந்து ஆதார் அடிப்படையிலான OTP ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டதால், பேரூராட்சி, நகராட்சி, நகர்புறத்தை ஒட்டியுள்ள பகுதிகள் மட்டும் மலைப்பகுதிகளில் உள்ள நிலங்களின் உரிமையாளர்களும் மற்றும் தனியார் கோவில் நிலங்களில் சாகுபடி செய்யும் குத்தகை விவசாயிகளாலும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்வதில் இடர்பாடுகள் இருந்தன.

இதைத்தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க வேளாண்மை துறையின் உயர் அலுவலர்கள் அடங்கிய குழு, ஒன்றிய அரசை நேரில் சந்தித்து, தேசிய பயிர் காப்பீடு வலைதளத்தில் விவசாயிகள் பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப இடர்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தது.

மேலும், குத்தகை விவசாயிகள், மலைப்பகுதி மற்றும் நகர்புற விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் எவ்வித சிரமமுமின்றி இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறும் வகையில், விவசாயி அடையாள எண் (FID) மற்றும் ஆதார் அடிப்படையிலான OTP ஒப்புதல் பெறுதல் ஆகியவை கட்டாய நிபந்தனைகிளிலிருந்து உரிய விலக்கு அளிக்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கிணங்க, தகுதியுள்ள குத்தகை விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில், ஒன்றிய அரசால் 2026-27 ஆம் ஆண்டிற்கு விவசாய அடையாள எண் (FID) மற்றும் ஆதார் அடிப்படையிலான OTP ஒப்புதல் பெறுதல் ஆகியவை கட்டாய நிபந்தனைகிளிலிருந்து உரிய தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே குத்தகைதாரர்கள் உட்பட அனைத்து விவசாயிகளும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள்  பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறிI A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News