இந்தியாவுக்கு காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில்,மேலும் 4 பதக்கங்கள்.
சமோவா நாட்டின் அபியா நகரில், காமன்வெல்த் இளையோர், ஜூனியர் மற்றும் சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது.
2-வது நாளில் 4 தங்கம் வென்ற,இந்தியா 3-வது நாளிலும் பதக்க வேட்டையை தொடர்ந்தது.
இந்திய வீராங்கனை பெல்லானா ஹரிகா ,பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் ஸ்னாட்ச் முறையில் 86 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 111 கிலோவும் என மொத்தம் 197 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். கரங்கி தரங்கினி, பூமிகா மோஹிதே இந்தியர்கள் (63 கிலோ எடைப்பிரிவு) வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினர்.
இந்திய வீரர் அபிஷேக் நிப்பானே சீனியர் பிரிவில் ஆண்களுக்கான 88கிலோ எடைப்பிரிவில் ,மொத்தம் 324கிலோ தூக்கி வெள்ளிப்பதக்கம் பெற்றார்
0
Leave a Reply