இராபி பருவத்திற்கான உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது, விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் தற்பொழுது வடகிழக்கு பருவமழை துவங்கி பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நெல், மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, பருத்தி மற்றும் சூரியகாந்தி பயிர்கள் சாகுபடி துவங்கப்பட்டுள்ளது.
பயிர்களுக்கு தேவையான இரசாயன உரங்கள் யூரியா 3742 மெ.டன், டிஏபி 1628 மெ.டன், பொட்டாஷ் 358 மெ.டன், காம்ப்ளக்ஸ் 1875 மெ.டன் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் 288 மெ.டன் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களிலுள்ள உர இருப்பு விலைப்பட்டியலை தினசரி விலை விவரம் பலகையில் எழுதி விவசாயிகளுக்கு தெளிவாக தெரியும்படி விலை பலகை வைக்க வேண்டும். விவசாயிகளிடம் ஆதார் எண் பெற்று விற்பனை முனையக்கருவி (POS) மூலம் உரிய விலைப்பட்டியலிட்டு உரம் விநியோகம் செய்திட வேண்டும்.
இராபி பருவம் தொடங்கி உள்ளதால் மாவட்டத்தில் உரத்தினை MRP-ஐ விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. யூரியா உடன் இணை பொருட்களை இணைத்து வழங்கக்கூடாது.
மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்ற தவறினாலோ அல்லது பராமரிப்பில் குறைபாடுகள் கண்டறியப்பட்டாலோ உரக்கட்டுப்பாட்டு ஆணை -1985ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தங்களது விற்பனை உரிமம் நிரந்தரமாக இரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply