சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட, நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களுக்கான சுயதொழில் தொடங்குவதற்கான விழிப்புணர்வு ஒரு நாள் கருத்தரங்கம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (15.10.2024) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் வாரியம் சார்பில், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட, நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களுக்கான சுயதொழில் தொடங்குவதற்கான விழிப்புணர்வு ஒரு நாள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பணத்தை பாதுகாப்பதற்கும் , சேமிப்புக்கும் வேறுபாடு உள்ளது. பணத்தை நாம் வீட்டில் வைப்பது என்பது பணத்தை பாதுகாப்பதாகும். இதைத் தாண்டி, அதை எப்போது சேமிப்பாக மாறுகிறது என்றால், ஏதாவது ஒன்றில் சேமித்து, அது பணவீக்கத்தை விட அதிகமான பலனை கொடுக்கிறது என்றால், அப்போதுதான் அது சரியான சேமிப்பு. அதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. தபால் நிலையம், வங்கி உள்ளிட்டவைகளில் சேமிப்பது என்பது ஒரு பாதுகாப்பான ஒன்று. அரசினுடைய பாதுகாப்பான சேமிப்பு திட்டங்கள் நிறைய இருக்கின்றன.இந்திய அளவில் முதலீட்டில் நல்ல வருமானம்; தரக்கூடிய வட்டி என்பது 12 முதல் 15 சதவீதம் கிடைத்தாலே மிகச் சிறப்பானது என கருதலாம். நடுத்தர வயதில் உள்ள்வர்கள் நீண்ட கால திட்டங்களில்; முதலீடு செய்யும் போது மிகப்பெரிய அளவிலான கூட்டு வட்டி முறையில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால், அதற்கு நம்மிடம் பொறுமை என்ற பண்பு இருக்க வேண்டும்.
பெண்களுக்கு நிறைய தொழில் வாய்ப்புகள் இருக்கின்றது. மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக கடனுதவிகள் தரப்படுகின்றன. அதன் மூலம் சிறு தொழில் செய்ய முடியும். அதற்கு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. உணவுப்பொருட்கள் சார்ந்த தொழில்களுக்கு நிறைய சந்தை வாய்ப்புகள் உள்ளன. பெண்களின் உண்மையான விடுதலை என்பது அவர்களுக்கான பொருளாதார சுதந்திரம் தான்.
எனவே, பெண்கள் இந்த கருத்தரங்கினை நல்லமுறையில் பயன்படுத்தி, அரசின் திட்டங்கள் மற்றும் பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை தெரிந்து கொண்டு, தங்களை பொருளாதார ரீதியில் உயர்த்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply