இராஜபாளையம் வட்டம், சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. ராணி ஸ்ரீகுமார் அவர்கள் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள் ஆகியோர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் (10.07.2024) நடைபெற்றது.
இம்முகாமில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம், 84 பயனாளிகளுக்கு ரூ.51,04,420/- மதிப்பில் இணையவழியில் பட்டாக்களையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம், 308 பயனாளிகளுக்கு ரூ.3,13,36,455/- மதிப்பில் இணையவழியில்; பட்டாக்களையும், 61 பயனாளிகளுக்கு ரூ.37,32,520/- மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 36 பயனாளிகளுக்கு பட்;டா மாறுதல் ஆணைகளையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 3 பயனாளிகளுக்கு ரூ.62,500/- மதிப்பில், உழவர் பாதுகாப்பு இறப்பு நிவாரண நிதிகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ.27,30,000/- மதிப்பில் வங்கி கடன், சமூக முதலீட்டு நிதி, நலிவுற்றோர் நிதியினையும், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் (பயறு) திட்டத்தின் கீழ், 4 பயனாளிகளுக்கு ரூ.4,930/- மதிப்பில்; பண்ணைக்கருவிகள் மற்றும் உளுந்து விதைகளையும் என மொத்தம் 501 பயனாளிகளுக்கு ரூ.4.30 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும்; அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்;முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைசார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அதனடிப்படையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.ஏழை எளிய கிராமப்புற மக்கள் தமக்கான சந்தேகங்களை போக்கிக் கொண்டு, அறிவியல் பூர்வமாக தெரிந்து கொண்டு பயன்பெறுவதே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதின் நோக்கம். தமிழ்நாடு அரசு மூலம் ஒவ்வொரு துறையின் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மானாவாரி பகுதிகளில் விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளுக்கு சாகுபடி செய்வதற்கு விதைகள், உபகரணங்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. காலம் காலமாக செய்து வரக்கூடிய விவசாய முறைகளை தாண்டி சிறுதானிய உற்பத்தி அதிகமாக செய்வதன் மூலமாக அதிக வருமானம் பெறலாம். எதிர்காலத்தில் சிறுதானிய பொருட்களின் சந்தை வாய்ப்புகள் நிறைய உள்ளன.கிராமப்புறங்களில் இன்றளவும் கூட பெண்கள் 12 வகுப்பு முடித்தாலே போதும் என்ற மனநிலை உள்ளது. இதனை மாற்றி அனைவரும் பெண்களுக்கான உயர்கல்வியை உறுதிசெய்ய வேண்டும். இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள். பெண்களின் உயர்கல்விக்காக புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக புதுமைப்பெண் என்ற திட்டம் மூலம் 6-லிருந்து 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக நமது பகுதிகளில் கல்லூரி படிப்பை அதிகப்படுத்த வேண்டும்.இதுபோன்று அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.எனவே, பொதுமக்கள் இதுபோன்று பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு, பயன்பெற வேண்டுமெனவும், மற்றவர்களுக்கும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply