அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (09.07.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், குருந்தமடம் ஊராட்சியில், பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.20 இலட்சம் மதிப்பில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மட்ட நீர் தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும்,
குருந்தமடம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில், அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும்,பந்தல்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ், ரூ.1.10 இலட்சம் மதிப்பீட்டில், மேம்படுத்தப்பட்ட பள்ளி வகுப்பறை (SMART CLASS) அமைக்கப்பட்டுள்ள பணியினை ஆய்வு செய்து பின்னர், அங்கு பயன்பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், கல்வி தரம் குறித்து கேட்டறிந்தார்.
பந்தல்குடி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில், வீரசின்னம்மாள் கோவிலுக்கு அருகில், கரை உயர்த்தப்பட்டு, குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு வரும் பணியினையும் மற்றும் 100 நாள் வேலை திட்டம் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்நிகழ்வின் போது, அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திரு.ரவி, பொறியாளர்கள் திரு.பாண்டியராஜ், முருகன், வட்டாட்சியர் திரு.செந்தில்வேலன், மேற்பார்வையாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply