திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், அருப்புக்கோட்டை வட்டம், கல்லூரணி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், அருப்புக்கோட்டை வட்டம், கல்லூரணி கிராமத்தில், (02.10.2024) மாகத்மாகாந்தி அடிகளின் 156 -வது பிறந்த நாளை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். (01.04.2024 முதல் 30.09.2024 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல்.(2023-2024),தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்து விவாதித்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம் குறித்து விவாதித்தல், ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதித்தார்கள்.
என்பது எல்லா மக்களையும் சமமாக பார்த்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பாகும். இந்த கிராம சபையின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், ஜனநாயக நாட்டில், கிராமத்தில்; ஊராட்சி தலைவர்கள், மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அரசுத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்கள் இருப்பார்கள். நாங்கள் எல்லாம் மக்களின் பணியாளர்கள். எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரம் உங்களிடம் இருந்து பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அதனடிப்படையில் இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம்.
கிராமங்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை நினைவு கொள்வதற்காகவும் கிராமங்கள் இன்று தனக்கு தேவையான வளர்ச்சியில் தன்னிறைவு அடைந்து விட்டதா என்பதை உறுதி செய்யவும் மகாத்மா காந்தியடிகள் உடைய காலத்திற்கும் பொருந்தக்கூடிய கொள்கைகள் எல்லாம் நாம் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வதற்கும் இன்றைய நாள் இருக்கிறது.
நமது கிராமத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், அனைத்து கிராமத்திலும் அனைத்து நகரங்களும் தூய்மையாக இருக்க வேண்டும். நாம் ஒவ்வொரு நாளும் உருவாக்கக்கூடிய குப்பைகள் நமது வீட்டில் இருந்து நம்ம செயல்பாடுகள் காரணமாக கடைகளில் இருந்து உருவாக்கக்கூடிய குப்பைகள் முறையாக நாம் அப்புறப்படுத்தி பராமரிக்கப்பட வேண்டும்.
குப்பைகள் பொது இடங்களில் தேங்கி கிடந்தால் நோய் பரவும் அபாயம் ஏற்படும்.குப்பைகள் மண்ணின் தன்மையை பாதிக்கும். அதனால், தூய்மைப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து, குப்பைகளை முறையாக மற்றும் குப்பை மக்காத குப்பைகள் என்று பிரித்து சரியாக கொடுக்க வேண்டும். கிராமங்களின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். மேலும், பொதுமக்கள் அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து செயல்பட்டால், ஒரு கிராமம் முன்னேறும், ஒரு நகரம் முன்னேறும், ஒரு நாடு முன்னேறும். இந்த நிகழ்ச்சியின் நோக்கமும் இது தான்.
மேலும், இந்த கிராமத்தில் இருக்கக்கூடிய பொதுவான பிரச்சனைகளை கூறி விவாதித்து முடிவுகளை எடுப்பதற்கும் இந்த கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. எனவே இந்த கிராம சபையில் எடுக்கக்கூடிய தீர்மானங்கள், விவாதிக்கக் கூடிய விவாத பொருட்களை, பொதுமக்கள் பங்களிப்போடு விவாதம் செய்து, அதில் முடிவுகள் எடுக்கவும், புதிய திட்டங்களுக்கான முன்மொழிவுகளை கருத்துக்களை தெரிவிக்கவும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, மூத்தக் குடிமக்கள், சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடப்பட்டது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சமூக முதலீட்டு நிதி தலா ரூ.50,000/- வீதம் இரண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1,00,000/-த்திற்கான காசோலையினையும், உற்பத்தியாளர் குழு ஒன்றிற்கு ரூ.30,000/-த்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி விசாலாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கல்லூரணி கிராம பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply