ஆனந்த் குமார், உலக விளையாட்டு 'ஸ்கேட்டிங்கில்'வெண்கலம் வென்றார் .
உலகவிளையாட்டு 12வதுசீசன்சீனாவில், இந்தியாசார்பில் 17பேர்(10வீரர்,7 வீராங்கனை), வில்வித்தை, பில்லியர்ட்ஸ், ராக்கெட்பால், ஸ்பீடு ஸ்கேட்டிங், உஷு என 5 வகையான விளையாட்டில் பங்கேற்கின்றனர்.
'இன்லைன் ஸ்பீடு ஸ்கேட்டிங்' ஆண்களுக்கான 1000 மீ., 'ஸ்பிரின்ட்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஆனந்த்குமார் வேல்குமார், ஆர்யன்பால் சிங்குமன் அரையிறுதிக்குள் நுழைந்தனர். இதில் 2வது இடம் பிடித்த ஆனந்தகுமார், பைனலுக்கு முன்னேறினார். ஆர்யன் குமார் 7வது இடம் பிடித்து வெளியேறினார்.
அடுத்து நடந்த பைனலில் இலக்கை ஒரு நிமிடம், 22.482 வினாடியில் கடந்த ஆனந்த்குமார் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
உலக விளையாட்டில், ஒரு சீசனில் இந்தியாவுக்கு இம்முறை அதிக பதக்கம் (3) கிடைத்துள்ளது.. உலக விளையாட்டு அரங்கில் இதுவரை இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 8 பதக்கம் கிடைத்துள்ளது.
0
Leave a Reply