விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் காலிப்பணியிடத்திற்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு அலுவலர் ஒரு காலிபணியிடத்திற்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பதவிற்கான கல்வித்தகுதி - முதுநிலை சமூகப்பணி (சமூகவியல்/உளவியல்) பயின்றவர்கள் மற்றும் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். குறைந்த பட்சம் 22 வயதாக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது : SC/ST - 35, MBC/DC - 32, General - 30 ஆகும். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
இப்பணிக்கு மாதம் தொகுப்பூதியம் ரூ.30,000/- வழங்கப்படும். இப்பணிக்கு தகுதியானவர்கள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கு 10.11.2024 -க்குள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply