மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் செயல்படுத்திட ஏதுவாக வாகன நிறுவனங்களிடமிருந்து (Travel Agency) விலைப்புள்ளிகள் பெற விண்ணப்பங்கள்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் TN-RIGHTS மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்;டம் செயல்படுத்திட ஏதுவாக வாகன நிறுவனங்களிடமிருந்து (Travel Agency) விலைப்புள்ளிகள் பெறவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வாகன நிறுவனங்கள் கீழ்கண்ட நிபந்தனைகளுடன் விண்ணப்பம் செய்பவர்களுக்கு முன்னுரிமைவழங்கப்படும். வாகனம், GSTபதிவு வாகன உரிமைபெற்ற ஓட்டுனர், எரிபொருள் செலவினம், வாகன பராமரிப்பு மற்றும் இதர தகுதியுடன் விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் 01.10.2024-க்குள் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விவரம் பெறுவதற்கு தொலைப்பேசி எண்.04562-252068 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply