இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான பணிகள் 18.10.2024 அன்று வரை நடைபெற உள்ளது
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 2025 தொடர்பான முன்னேற்பாட்டு பணிகளின் ஒரு பகுதியாக, வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் அனைவரும், தொடர்புடைய வாக்குச் சாவடிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வீடுகளுக்கும் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான பணிகளை 18.10.2024 வரையிலும் மேற்கொள்ள உள்ளனர்.மேற்படி பணிகள் முடிவடைந்த பின்னர் 29.10.2024 அன்று வரைவு வாக்காளர் பட்டியலானது வெளியிடப்படவுள்ளது.
எனவே அனைத்து வாக்காளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொவித்துள்ளார்.
0
Leave a Reply