ஒலிம்பிக்கில், காது கேளாத பாட்மின்டன்வீராங்கனை, தமிழகத்தின் ஜெர்லின் அனிகா 'கொடி', ஏந்தி வரவுள்ளார்.
நவ.15-26ல் காது கேளா தோருக்கான ஒலிம்பிக்போட்டி ,ஜப்பான்தலைநகர் டோக்கியோவில், ('டெப்லிம் பிக்ஸ்') ,இந்தியா சார்பில் முதன் முறையாக 111 பேர், தடகளம், பாட்மின்டன், கோல்ப், ஜூடோ உள் ளிட்ட 11 வகையானபோட்டிகளில் பங்கேற்கின்றனர்.
துவக்க விழா அணி வகுப்பில் இந்திய மூவர்ணக் கொடியை பாட்மின்டன் வீராங்கனை, தமிழகத்தின் ஜெர்லின் அனிகா 21, ஏந்தி வரவுள்ளார். மதுரை சேர்ந்த இவர், 3வது முறை யாக (2017, 2022, 2025) ஒலிம்பிக்கில் களமிறங்க உள்ளார்.
கடந்த 2022ல் பிரேசிலில் நடந்த போட்டியில் ஒற்றையர், கலப்பு இரட்டையர், அணிகள் பிரிவில் தலா ஒரு தங்கம் கைப்பற்றினார். இதனையடுத்து 2022ல் நாட்டின் உயரிய அர்ஜுனா விருதை வென்றார்.
ஜெர்லின் கூறுகையில், "இந்திய மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்ல இருப்பதுமிகப் பெரிய கவுரவம். இது, எனது கடின உழைப்பு, அர்ப்பணிப்புக்கு கிடைத்த பரிசாக கருதுகிறேன்," என்றார்.
இந்தியா சார்பில் 2022 இல் பிரேசிலில் நடந்த போட்டியில் 65 பேர் பங்கேற்றனர். இதில் 8 தங்கம், ஒரு வெள்ளி, 7 வெண்கலம் என 16 பதக்கம்கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 9வது இடம் பிடித்தது.
0
Leave a Reply