25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சட்டமன்ற பொது தேர்தல், 2026 நடைபெறுவதையொட்டி பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த காவல் பார்வையாளர் வருகை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சட்டமன்ற பொது தேர்தல், 2026 நடைபெறுவதையொட்டி பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த காவல் பார்வையாளர் வருகை.

எதிர்வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பணிகள் எந்தவித சந்தேகங்களுக்கும் இடமின்றி நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக, இந்திய தேர்தல் ஆணையம் விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கும்  தேர்தல் பொது பார்வையாளர்களாக  இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களையும்,  செலவின பார்வையாளர்களாக இந்திய வருவாய் பணி அலுவலர்களையும், ஒருங்கிணைந்த காவல் பார்வையாளராக இந்திய காவல் பணி அலுவலரையும்  நியமனம் செய்து ஆணையிட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் பொதுப்பார்வையாளர்களாக 202-இராஜபாளையம் மற்றும் 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு திரு.உதயன் மிஷ்ரா, I A S., அவர்களும் (9489985870), 206- விருதுநகர் மற்றும் 207- அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கு திரு.அனுப்குமார் யாதவ், I A S., அவர்களும்(9489985872), 208- திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு திரு.சஞ்சீவ் ஶ்ரீவாஸ்தவா, I A S ., அவர்களும்(9489985873) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செலவின பார்வையாளர்களாக 202-இராஜபாளையம் மற்றும் 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு திரு.சுக்செயின் சிங்,இ.வ.ப., அவர்களும்(9489985874), 204- சாத்தூர் மற்றும் 205- சிவகாசி சட்டமன்றத் தொகுதிகளுக்கு திரு.அனில்குமார்,இ.வ.ப., அவர்களும்(9489985875), 206- விருதுநகர் மற்றும் 207- அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கு திரு.நாயன்ஜோதி நாத், இ.வ.ப., அவர்களும்(9488985876), 208- திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு திரு.வாக்மரே ஜெய்,இ.வ.ப., அவர்களும்(9488985877) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கும் திரு.அகிலேஷ் குமார் சௌராசியா,இ.கா.ப., அவர்களை (9488985878) ஒருங்கிணைந்த காவல் துறை பார்வையாளராக நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

ஆதலால் பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்ற தொகுதிகள் தொடர்பான தேர்தல் பணிகள் குறித்த புகார்கள் ஏதும் இருப்பின், தொடர்புடைய சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பார்வையாளர்களின் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் வாயிலாகவோ, நேரிலோ தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News