நித்திய கல்யாணி சாகுபடி, பரவலாக்கம், சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மண்டல ஆராய்சி நிலையத்தில், அருப்புகோட்டை வேளாண் தொழில் ஊக்குவிப்பு மையம், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம், சென்னை இணைந்து நித்திய கல்யாணி சாகுபடி, பரவலாக்கம் மற்றும் ஏற்றுமதி குறித்த ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் (23.10.2024) தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இன்று உலக அளவில் இருக்கக்கூடிய விவசாய பொருட்கள் சார்ந்த ஏற்றுமதி வாய்ப்பில் 10 முதல் 15 விழுக்காடு அளவிற்கு நித்திய கல்யாணி ஏற்றுமதிக்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதன் பூ, இலை, விதை, தண்டு பகுதிகள் உள்ளிட்டவைகள் மருத்துவ குணம் சார்ந்தவை. நித்திய கல்யாணி சித்தா, ஆயுர்வேதா என்ற மருத்துவ முறைகளில் உலகம் முழுவதும் வாய்ப்புகளும், தேவைகளும் எதிர்காலத்தில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது.அதிலும் குறிப்பாக அதனை ஒட்டிய மருந்து பொருட்கள் இந்தியாவில் கிழக்கு ஆசிய நாடுகளில் அதனுடைய ஆராய்ச்சிகள் அதனை பயன்படுத்தக்கூடிய மக்களும் அதிகமாக இருக்கின்றனர். அது தொடர்பாக அதிகமான விளைபொருள்களும் அங்கு உள்ளன. கீழ்நாடுகளில் சித்த மருத்துவ முறையில் கீழாநெல்லி, துளசி, சோற்றுக்கற்றாழை பெரிய அளவில் பயன்படுத்துகின்றன.நித்திய கல்யாணியில் உள்ள மருத்துவ குணங்கள் இரத்த புற்று நோய்களை கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்தவும் மற்றும் சிறுநீரக கற்களை அகற்றவும் பயன்படுத்தப்படுகின்றன.
இதன் பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் பொருட்டு, தோட்டக்கலைத் துறையின் கீழ், 2.5 ஏக்கருக்கு ரூ.13,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு சாகுபடி செலவும் மிக குறைவாகவே உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 375 ஏக்கர் அளவில் நித்திய கல்யாணி பயிரிட படுகிறது. நித்திய கல்யாணி பயிர்க்கு மிக குறைந்த அளவிலேயே நீர் பாசனம் தேவைப்படுவதால், மானாவாரியில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இதன் மருத்துவக் குணங்களுக்காக அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.விவசாயிகள் நித்திய கல்யாணி சாகுபடி மூலம் அதிக இலாபம் எடுக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கருத்தரங்கில் நித்திய கல்யாணி சாகுபடி செய்வதன் மூலம் வருமானத்தை அதிகரிக்கும் யுத்திகள் குறித்தும், நித்திய கல்யாணியின் முக்கியத்துவம் மற்றும் சீரிய சாகுபடி முறைகள் குறித்தும், மாவட்டத்தில் அதற்கான சாகுபடி வாய்ப்புகள் குறித்தும், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும், நித்திய கல்யாணியின் பொருளாதார மகத்துவம் குறித்தும் , இதனை கடல்வழி மற்றும் ஆகாய வழி ஏற்றுமதிக்கு தயார்படுத்துதல் குறித்தும் தொடர்புடைய அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
இக்கருத்தரங்கில், அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் செல்;வி ரமேஷ், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதன்மையர் முனைவர் சொ.வன்னியராஜன், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி இணைப் பேராசிரியர் முனைவர் சாந்தி, அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையம் இணைப் பேராசிரியர் (தோட்டக்கலை) முனைவர் பாலசுப்ரமணியன், தமிழ்நாடு உணவுப் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (மதுரை) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச.ஒளியரசன், திருச்சி புதிய வேளாண் தொழில் முனைவோர்க்கான மையம் திரு.வி.விக்னேஷ், தூத்துக்குடி V.O.C. துறைமுகம் துணை போக்குவரத்து மேலாளர் திரு.ரமேஷ், பயிர் தனிமைப்படுத்துதல் நிலையம் பயிர் பாதுகாப்பு அலுவலர் முனைவர் வி.பி.ஸ்ரீஹர்ஷா, கோயமுத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் துணை வேந்தர் முனைவர் கீதாலெட்சுமி, அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையம் இணைப்பேராசிரியர் முனைவர் அகிலா, விவசாயிகள், கொள்முதல் செய்வோர், ஏற்றுமதியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
0
Leave a Reply