மல்லாங்கிணறு ஊராட்சியில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி LED வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7-சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நேர்மையான மற்றும் கண்ணியமான தேர்தலை எதிர்கொள்ளவும், 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையிலும் வாக்களர்களிடையே பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வருகின்றன.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்:
அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யவும், என் வாக்கு விற்பனைக்கு அன்று என்பதை வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம், உறுதிமொழி, ரங்கோலி போட்டி, மெஹந்தி போட்டி மற்றும் பேச்சுப் போட்டி உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் சட்டமன்றத் தேர்தல் குறித்த விழிப்புணர்வு வாக்காளர்களிடையே கொண்டு செல்லப்படுகிறது.
வாகன விழிப்புணர்வு:
அதனடிப்படையில், (10.04.2026) விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மல்லாங்கிணறு கிராமத்தில் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் LED வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
0
Leave a Reply