பேபி கார்ன் பஜ்ஜி
தேவையான பொருட்கள் :
கால் கிலோ பேபி கார்ன் , ஒரு கப் கடலை மாவு, இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு , அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்,
ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் , கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு டீஸ்பூன் உப்பு , தேவையான எண்ணெய் பொறிப்பதற்கு
செய்முறை ;
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். பேபி கார்ன் நன்றாக சுத்தம் செய்து நீல வாக்கில் இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பேசினில் கடலை மாவு அரிசி மாவு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு சிறிய அகலமான கடாயில் எண்ணெய் வைத்து, கரைத்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து ஒன்றொன்றாக போட்டு நன்கு சிவந்து வந்தவுடன் எடுக்கவும்.
இது வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும். கடிக்கும் பொழுது தனி சுவையாக இருக்கும்.
பேபி கார்ன் பஜ்ஜி ரெடி. இதனுடன் தக்காளி சாஸ் வைத்து பரிமாறலாம்.
0
Leave a Reply